சொந்த மண்ணில் இந்திய அணி பலவீனமாக உள்ளது - முன்னாள் வீரர் கிரேக் சாப்பல் கருத்து...!
சொந்த மண்ணில் இந்திய அணி பலவீனமாக உள்ளது என்று ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரேக் சாப்பல் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இப்போட்டி பிப்ரவரி 9 முதல் மார்ச் 13 வரை இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது.
இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால் அதை 3-0 அல்லது 2-0 என வென்றால் தான் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தை பிடித்து ஃபைனலுக்கு முன்னேற முடியும். எனவே, இந்திய அணிக்கு இத்தொடர் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்திய அணி பலவீனமாக உள்ளது
இந்நிலையில், சொந்த மண்ணில் இந்திய அணி பலவீனமாக உள்ளது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் சாப்பல் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியில் ரிஷப் பந்த் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோர் இல்லாதது இந்திய அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாகும். முதல்முறையாக சொந்த மண்ணில் இந்திய அணி பலவீனமாக உள்ளது. நாதன் லயனுடன், ஆஷ்டன் அகர் இணைந்து பந்து வீசினால் இந்திய வீரர்களுக்கு சவாலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.