ஆசிரியர் தினம்; கடினமாக உழைக்கின்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் - மோடி
இந்தியா முழுவதும் ஆசிரியர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி வாழ்த்து
இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் , பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,
"ஆசிரியர்கள் தினத்திற்கு #TeachersDay குறிப்பாக, இளைஞர் மனங்களில் கல்வியின் சுகங்களை பரப்புகின்ற கடினமாக உழைக்கின்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவருக்கும் நான் புகழாரம் சூட்டுகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
Greetings on #TeachersDay, especially to all the hardworking teachers who spread the joys of education among young minds. I also pay homage to our former President Dr. Radhakrishnan on his birth anniversary. pic.twitter.com/WWt4q2appo
— Narendra Modi (@narendramodi) September 5, 2022