பாகிஸ்தானுக்கு எதிராக விராட்கோலி அடித்த சிக்ஸர் - Greatest T20 shot of all time...புகழ்ந்து தள்ளிய ICC...!

Virat Kohli Viral Video T20 World Cup 2022 International Cricket Council
By Nandhini Nov 16, 2022 01:20 PM GMT
Report

பாகிஸ்தானுக்கு எதிராக விராட்கோலி அடித்த சிக்ஸரை Greatest T20 shot of all time என்று விராட் கோலியை ICC புகழ்ந்துள்ளது.

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -

ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்த 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 13ம் தேதி நிறைவடைந்தது.

இப்போட்டியில், ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் கலந்து கொண்டு விளையாடின.

நடைபெற்ற T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 2-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது.

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

சமீபத்தில், T20 உலக கோப்பை போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானுடன் நேருக்கு நேர் மோதியது.

மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி அடைந்தது.

ஆட்டமிழக்காமல் விராட் கோலி நின்று விளையாடி 82 ரன்களை குவித்தார். இது இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அந்தப் போட்டியில் விராட் கோலி ஆட்ட நாயகனாக விருதை கைப்பற்றினார் விராட் கோலி.

விராட் கோலி சாதனை

T20 உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலி 4 அரை சதங்களை பதிவு செய்து அசத்தினார்.

greatest-single-t20-shot-of-all-time-icc-kohli-six

விராட் கோலியை புகழ்ந்து தள்ளி ICC

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில், விராட் கோலி அடித்த சிக்ஸரை Greatest T20 shot of all time என்று ஐசிசி புகழ்ந்துள்ளது.

தற்போது விராட்கோலி அடித்த Greatest T20 shot of all time வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த விராட் கோலியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.