மக்கள் அன்பை விட மகத்தான பலமில்லை - நன்றி தெரிவித்த கமல்ஹாசன்!
தமிழகத்தில் முதல்முறையாக தேர்தலில் முதல்முறையாக களம் கண்டுள்ளது மக்கள் நீதி மய்யம். கட்சி தொடங்கிய 3 ஆண்டுகளிலேயே மக்களின் பேராதரவை பெற்றிருக்கிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கைகளும், கோட்பாடுகளும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐ.ஜே.கே உடன் கூட்டணி அமைத்த கமல்ஹாசன் 154 தொகுதிகளில் ம.நீ.ம வேட்பாளர்களை நிறுத்தினார்கள். சட்டமன்றத் தேர்தலும் நடந்து முடிந்து விட்டது. இந்நிலையில் தேர்தலில் தனக்கு உறுதுணையாக இருந்த எல்லாருக்கும் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
16 சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் அறிக்கை. pic.twitter.com/tW6dfNo8lB
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) April 7, 2021
இது குறித்து அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது - தமிழகத்தின் 16ஆவது சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிகழ்ந்திருக்கிறது. கொரோனா போன்றதொரு அச்சுறுத்தல் தமிழக வரலாற்றில் இதற்கு முன் இருந்ததில்லை. இந்த இக்கட்டான சூழலிலும் 72% வாக்காளர்கள் தங்களது கடமையை ஆற்றி இருப்பது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது.
இனிவரும் தேர்தல்களிலும் நமது பங்களிப்பு சிறப்பாக இருக்க வேண்டும். தேர்தலில் என்னோடு கைகோர்த்த மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள், தோழமை கட்சி உறுப்பினர்கள், நண்பர்கள், சக போட்டியாளர்கள், வாக்காளர்கள், ஊடகவியலாளர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
இந்த தேர்தல் ஒரு புதிய தொடக்கம். புதிய அனுபவம். மக்கள் அன்பை விட மகத்தான பலமில்லை.
தமிழகத்தை சீரமைப்பும் என்பது வெறும் கோஷம் அல்ல. அது ஒரு கூட்டுக் கனவு. மண்ணின் மொழியை, மக்களை காக்க இன்று போல் என்றும் களத்தில் இருப்போம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.