சமந்தாவுக்கு அடித்த ஜாக்பாட்... என்ன தெரியுமா? தீயாய் பரவும் தகவல்!

Vijay Samantha Lokesh Kanagaraj Indian Actress
By Sumathi Jul 18, 2022 11:37 AM GMT
Report

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.

நடிகை சமந்தா

இவர் தென்னிந்திய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலமாக திரையுலகில் கலக்கி வருகிறார். இவர் படம் நடித்தாலோ அல்லது விளம்பரங்கள், போட்டோ ஷூட் என எது செய்தாலும் ரசிகர்களிடம் வைரலாகி பெரும் வரவேற்பை பெற்று விடும்.

samantha

சமீபத்தில் இவர் நடித்த ‘காத்து வாக்குல இரண்டு காதல்’ திரைப்படம் ஆனது மாபெரும் வெற்றி அடைந்து வசூல் வேட்டை நடத்தி வந்த நிலையில், இப்போது இவர் தெலுங்கில் விஜய் தேவர் கொண்டாவுடன் இணைந்து ‘குஷி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

வில்லியாக வாய்ப்பு

மேலும் தமிழில் ‘சகுந்தலம், யசோதா’ ஆகிய படங்களின் உடைய படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தான் வில்லியாக நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது.

சமந்தாவுக்கு அடித்த ஜாக்பாட்... என்ன தெரியுமா? தீயாய் பரவும் தகவல்! | Great Opportunity For Samantha

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 67 படத்தில் சமந்தா தான் வில்லி என்று தகவல் வெளியாகியிருக்கிறது.