இலவசமாக தங்க ஜோடியை தேடும் தீவு; சம்பளமும் தராங்கலாம்.. - ஆனால் ஒரு கண்டிஷன்..!

Ireland World
By Jiyath Jan 16, 2024 05:53 AM GMT
Report

அயர்லாந்தில் உள்ள ஒரு தீவு ஜோடியாக தங்குவதற்கு சம்பளத்துடன் கூடிய ஆஃபர் வெளியிட்டுள்ளது.  

கிரேட் பிளாஸ்கெட் தீவு

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் மிக அழகான கிரேட் பிளாஸ்கெட் தீவு (Great Blasket Island) உள்ளது. இந்த தீவில் சம்பளத்துடன் தங்குவதற்கு ஒரு ஜாப் ஆஃபரை அந்த தீவு வெளியிட்டுள்ளது.

இலவசமாக தங்க ஜோடியை தேடும் தீவு; சம்பளமும் தராங்கலாம்.. - ஆனால் ஒரு கண்டிஷன்..! | Great Blasket Island Looking For Duo For Caretaker

அதுவும் தனியாக அல்லாமல் ஜோடியாக தங்கலாம். ஆனால் அதற்கு பல கண்டிஷன்கள் உள்ளது. இதுகுறித்து அந்த வெப்சைட்டில் கூறியிருப்பதாவது "அழகிய இயற்கை காட்சிகளைக் கொண்ட கிரேட் பிளாஸ்க்ட் தீவில் உள்ள காஃபி ஷாப்பை நடத்துவதற்கு புதிய ஜோடியை நாங்கள் தேடுகிறோம்.

நீங்கள் இங்கேயே தங்கி, சுற்றுலாப்பயணிகளுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க வேண்டும். காஃபி ஷாப்பை தினமும் சுத்தம் செய்து, வரும் கெஸ்ட்களை வரவேற்று அவர்களை கவனிக்க வேண்டும்.

இனி இந்திய ரூபாயை 35 நாடுகளில் பயன்படுத்தலாம் - மத்திய அமைச்சர் தகவல்!

இனி இந்திய ரூபாயை 35 நாடுகளில் பயன்படுத்தலாம் - மத்திய அமைச்சர் தகவல்!

வேலைகள்?

அவர்களுக்கு காபி, டீ உள்ளிட்டவற்றை வழங்குவது மற்றும் தேவையானவற்றைச் செய்து கொடுப்பது உள்ளிட்ட பணிகள் இருக்கும். காஃபி ஷாப் மேல் பகுதியில் இருக்கும் மெயின் பெட்ரூமில் தங்கிக் கொள்ளலாம்.

இலவசமாக தங்க ஜோடியை தேடும் தீவு; சம்பளமும் தராங்கலாம்.. - ஆனால் ஒரு கண்டிஷன்..! | Great Blasket Island Looking For Duo For Caretaker

அதனால்தான் ஜோடியாக இந்த வேலைக்கு ஆட்களை நாடுகிறோம். அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டுக்கொள்ளலாம். லாண்டரிகளை வாங்குவதற்கு ஊழியர்கள் வந்து விடுவார்கள் உணவு தேவைப்பட்டால் தினமும் டெலிவரி செய்யப்படும்.

இந்த பணிக்கு விடுமுறையை கிடையாது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் சம்பளம் பற்றி எந்த தகவலும் சொல்லப்படவில்லை. ஊதியம் வழங்கப்படும் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.