டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டது குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்தது மன நிறைவு மற்றும் மகிழ்ச்சி அளிக்கிறது.
நீர் நிலை துார்வாரும் பணிகள் சிறப்பாக முடிக்கப்பட்டுள்ளது.டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை நீர் சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து நீர்வழித் தடங்களிலும் துார்வாரும் நடைபெறுகின்றன.வடகிழக்கு பருவமழையின் போது சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்காமல் காக்கப்படும்.
டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை நீர் சென்று சேரும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், கரூர்- 19,திருச்சி - 90,நாகை - 30,மயிலாடுதுறை - 49 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாவும் தெரிவித்துள்ளார்.
Live: செய்தியாளர் சந்திப்பு https://t.co/jotjRIQLVN
— M.K.Stalin (@mkstalin) May 31, 2022