போதையில் தகராறு செய்த பேரன் - கழுத்தை நெறித்து கொன்ற தாத்தா

murder coimbatore
By Petchi Avudaiappan Sep 01, 2021 07:24 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

கோவையில் போதையில் தகராறு செய்த பேரனை தாத்தாவே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிவனாந்தா காலனியை சேர்ந்தவர் சுரேஷ் என்பவரது மகன் விஜயராகவன் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அதேசமயம் குடிக்கு அடிமையான அவர் நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்டு விட்டு தனது அறைக்குச் சென்ற நிலையில் காலையில் அசைவற்று கிடந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் விஜயராகவனை அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவரது தாத்தா முருகன் விஜயராகவன் கீழே விழுந்து மயங்கியதில் உயிரிழந்துவிட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் சொல்லியுள்ளார்.

இதில் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விஜயராகவன் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.இதனால் சந்தேகத்தின் பேரில் முருகனைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் தினமும் மது அருந்திவிட்டு, போதையில் தகராறு செய்ததால் திருப்பதி, நாகராஜ் ஆகிய இருவரின் உதவியுடன் விஜயராகவனை கொன்றதை அவரது தாத்தா முருகன் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.