கொளுத்தும் வெயிலில் தவித்த மூதாட்டி... - போக்குவரத்து போலீஸ் செய்த நெகிழ்ச்சி செயல்... - குவியும் பாராட்டு
help
grandmother
பாராட்டு
மூதாட்டி
உதவி
traffic-police
போக்குவரத்துபோலீஸ்
செருப்பு
ஆணையர்
By Nandhini
தாம்பரத்தில் கொளுத்தும் வெயிலில் காலில் செருப்பு இல்லாமல் நடக்க முடியாமல் 80 வயது மூதாட்டி ஒருவர் தவித்து வந்துள்ளார்.
இதைப் பார்த்த போக்குவரத்து காவலர் ஜான்சன் புரூஸ் லீக் என்பவர் மூதாட்டிக்கு செருப்பு வாங்கி கொடுத்து, அதை அந்த மூதாட்டியின் காலில் போட்டு விட்டுள்ளார்.
இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவரின் செயருக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், போக்குவரத்து காவலர் ஜான்சனுக்கு தாம்பரம் காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.