‘‘இது என் என் பாட்டியின் பிஎஸ்பிபி பள்ளி’’ பெயர் கெட்டுப்போக விடமாட்டேன்.. கொதித்தெழுந்த மதுவந்தி !
பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டினால் ஒய்.ஜி.மகேந்திரனும், அவரது மகளுமான மதுவந்தியும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளனர்
. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுவது குறித்து கொதிதெழுந்துள்ளார் மதுவந்தி.
[
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்ராஜகோபாலன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் இதைவிட வேறு அசிங்கம் கிடையாது.
அவர் தவறு செய்திருந்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், ஒரு தனிப்பட்ட {ஆசிரியர்}நபர் செய்த காரியத்திற்காக ஒட்டுமொத்த பள்ளி நிர்வாகத்தினையே தவறாக பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
. இந்த பள்ளிதான் என் பாட்டியின் பாரம்பரியம். பாட்டி ஒஜிபி கஷ்டப்பட்டு உருவாக்கிய இந்த பள்ளி கெட்டுப்போக விடமாட்டேன்.
நான் இந்த பள்ளியை நடத்தவில்லை என்றாலும், பாட்டியின் பள்ளி என்கிற முறையில், என் அப்பா ஒரு பொறுப்பில் இருப்பதாலும், ராஜகோபாலன் வழக்கின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்.
இந்த பிரச்சனையில் சாதியை உள்ளே கொண்டு வந்து அரசியல் செய்வதுதான் வேதனை அளிக்கிறது.
பாஜகவில் நான் இருப்பதால் என்னை வைத்து சாதி அரசியல் செய்யலாம் என்று நினைக்கிறார்கள்.
அதற்காக சாதி அரசியலை உள்ளே கொண்டு வரும், சாதி ரீதியாக பேசும் கோமாளிகளை விடமாட்டேன். கேள்வி கேட்கத்தான் செய்வேன்.
அதற்கு இந்த கோமாளிகள் அடக்கிக் கொள்ள வேண்டும்.என்று கூறியுள்ளார்.