நகைக்கு ஆசைப்பட்டு பாட்டியின் தலையில் ஓங்கி அடித்து கொடூரமாக கொலை செய்த பேரன் - நடுங்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்

murdered grandmother grandson shocking news Traumatic event sad news grandson arrest
By Nandhini 10 மாதங்கள் முன்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்தவர் பேபி சரோஜா (70). இவரது கணவர் தனியார் கல்லூரி பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.

இவர்களுக்கு மொத்த 4 மகள்கள் இருக்கிறார்கள். அனைவருக்கும் திருமணம் முடிந்து அவர்களது கணவர் வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், பேபி சரோஜா பாட்டி கணவர் இறந்து விட்டார்.

கணவர் இறப்பிற்குப் பிறகு பேபி சரோஜா மட்டும் வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார். நேற்று மாலை அவரது வீட்டின் உள்ளே ஏதோ சத்தம் கேட்டதாக அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது.

கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, பாட்டி ரத்த காயங்களுடன் கீழே கிடப்பதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது போலீசார் நடத்திய விசாரணையில், மூதாட்டி எப்போதும் கதவை மூடிய படியே வீட்டில் இருப்பவர். தனக்கு தெரிந்த நபர்களை மட்டுமே வீட்டினுள் அனுமதிப்பார்.

தாங்கள் கூட தற்போது மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு தான் இங்கு வந்து பார்த்ததாக கூறினர். பாட்டியின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலி, வீட்டில் இருந்த நகைகள் அனைத்தும் காணாமல் போயுள்ளது.

இதனால், மூதாட்டியை வீட்டினுள் புகுந்த நபர் கொடூரமாக தாக்கி கொலை செய்ததும் போலீசாருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கொலையாளி குறித்த தகவல் சேகரிக்கப்பட்டது.

விசாரணையில், மூதாட்டியை கொலை செய்தது அவரின் உறவுக்கார பேரன் பாஸ்கர் எனும் புரூஸ்லி என்பது தெரியவந்தது. பாஸ்கர் என்பவர் சிறமடம் பகுதியை சேர்ந்தவர். சமீபகாலமாக மூதாட்டியின் வீட்டருகே அவர் குடும்பத்தோடு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இவர் அவ்வப்போது மூதாட்டிக்கு தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மதுபோதையில் பாஸ்கர் மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார்.

அப்போது திடீரென மூதாட்டியின் நகை மீது ஆசைப்பட்டு அவர் மூதாட்டியை கொடூரமாகத் தாக்கி கொலை செய்ததாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, பாஸ்கரனை போலீசார் கைது செய்துள்ளனர். 

நகைக்கு ஆசைப்பட்டு பாட்டியின் தலையில் ஓங்கி அடித்து கொடூரமாக கொலை செய்த பேரன் - நடுங்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம் | Grandmother Grandson Murdered Traumatic Event