Viral Video : அனாதை இல்லத்தில் 70 வயது பாட்டிக்கும், 75 வயது தாத்தாவுக்கும் திருமணம்...!

Viral Video Maharashtra
By Nandhini Mar 02, 2023 02:42 PM GMT
Report

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு அனாதை இல்லத்தில் 70 வயது பாட்டிக்கும், 75 வயது முதியவருக்கும் திருமணம் நடைபெற்றது.

70 வயது பாட்டிக்கும், 75 வயது தாத்தாவுக்கும் திருமணம்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள அனாதை இல்லத்தில், சில நாட்களுக்கு முன்பு பாபுராவ் பாட்டீல் என்ற 75 வயதாகும் தாத்தா, 70 வயதாகும் அனுசயாவை பார்த்து திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறி காதலை வெளிப்படுத்தினார். அப்போது, பாட்டி அவருடைய காதலுக்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். அதன் பின், 8 நாட்களுக்குப் பிறகு பாட்டி அனுசயா அவருடைய காதலை ஏற்று திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து, முதியவர்கள் இருவரும் அனாதை இல்லத்தில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த பிறகு இரு முதியவர்களும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்க விரும்புவதாகவும், இதற்காகவே திருமணம் செய்து கொண்டதாகவும் அவர்கள் இருவரும் கூறினர்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.    

grandmother--75-year-old-grandfather-married