எனக்கு 61..உனக்கு 24.. குழந்தைக்காக காத்திருக்கும் காதல் ஜோடி : வைரலாகும் புகைப்படம்
37 வயது வித்தியாசம் உள்ள ஒரு தம்பதியினர் குழந்தையைப் பெற்று கொள்ள 1.14 கோடி ரூபாயை செலவிடத் தயாராக உள்ளனர்.
காதலுக்கு வயதில்லை
2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், 24 வயதான குரான் மெக்கெய்ன், 61 வயதான செரில் மெக்ரிகோரியை திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவரும், 2023 ஆம் ஆண்டு வாக்கில் வாடகைத் தாய் மூலம் குழந்தையை பெற்று கொள்ள 120,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ 1.14 கோடி) செலவிட தயாராக இருப்பதாகக் கூறுகின்றனர்.
இதுகுறித்து குரான் கூறுகையில், "வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற கொள்ள 6,000-120,000 யூரோ வரை ஆகும். நாங்கள் தேர்ந்தெடுத்த வாடகைத் தாய் கிடைப்பது எல்லாம் அதிர்ஷ்டம். 2023 வசந்த காலத்தின் பிற்பகுதியில் குழந்தை பிறக்கும்" என்றார்.
குழந்தைக்காக காத்திருக்கும் தம்பதி
செரிலுக்கு ஏற்கனவே ஏழு குழந்தைகள் உள்ளனர். அவருக்கு 17 வயதில் ஒரு பேரகுழந்தையும் உள்ளது. இதுகுறித்து கூறும் குரான், "நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இது நான் எப்போதும் விரும்பிய ஒன்று.
என் வாழ்க்கையின் காதலியுடன் ஒரு குடும்பம் வேண்டும் இதுபற்றி செரில் கூறுகையில், இந்தப் புதிய பயணத்தில் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் மற்றொரு குழந்தை ஆச்சரியமாக இருக்கும்.
புதிய குழந்தைக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்கு நான் ஏற்கனவே திட்டமிட்டுள்ளேன். வளைகாப்பு நடத்தலாம் என்று நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.
குரானுக்கும் செரிலுக்கும் 37 வயது வித்தியாசம் காரணமாக இந்த ஜோடி அடிக்கடி விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. மக்கள் பெரும்பாலும் செரிலை குரானின் பாட்டி என்று தவறாக நினைக்கிறார்கள்.
இதுகுறித்து குரான் கூறுகையில் எங்களுக்கு நேர்மறை, எதிர்மறையான கருத்துகள் கலந்தே வருகின்றன. மிக மோசமான விஷயம் என்னவென்றால், நான் அவரை பணத்திற்காக பயன்படுத்துகிறேன் என விமர்சிக்கிறார்கள்.
நீங்கள் விரும்பும் அளவுக்கு வெறுத்து கொள்ளுங்கள். நாங்கள் இன்னும் சாதாரண வாழ்க்கையை சந்தோஷமாக வாழப் போகிறோம்எனக் கூறுகின்றனர் இந்த காதல் தம்பதிகள்
பாலியல் கிளினிக்குகள் மூலம் குரங்கு அம்மை நோய்!

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
