12 கொள்ளுப் பேரப்பிள்ளைகளுடன் 100வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய மூதாட்டி
karaikal
Grandmother
100th Birthday
By Thahir
காரைக்கால் அடுத்த வடமறைகாடு பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தம்மாள்.இவரது கணவர் சுப்பிரமணியன் பிரெஞ்சு ராணுவத்தில் சிப்பாயாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில் கடந்த 1972ம் ஆண்டு உயிரிழந்தார்.
1921ஆம் ஆண்டு பிறந்த கோவிந்தம்மாள்,இன்று தனது 100வது பிறந்தநாளை தனது இரண்டு பெண்கள்,ஐந்து பேத்தி மற்றும்
ஒரு பேரனுடன் 12கொள்ளு பேரப்பிள்ளைகளுடன் கேக் வெட்டி குழந்தைகளுடன் குழந்தையாக மாறி மகிழ்ச்சியாக கொண்டாடினார்.
தனது 100வது வயதில் 6 பேரப்பிள்ளைகள் மற்றும் அவர்களுக்கு பிறந்த 12 கொள்ளுப் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய கோவிந்தம்மாளிடம் அனைவரும் வாழ்த்துக்கள் மற்றும் ஆசிர்வாதத்தை பெற்று கொண்டனர்.