1 வயதேயான பேரனை கொன்ற பாட்டி! திடுக்கிடவைக்கும் சம்பவம்
கோயம்புத்தூரில் ஒரு வயதேயான குழந்தையை கொன்ற பாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
கோயம்புத்துரின் லாலிரோடு பகுதியை சேர்ந்தவர் நந்தினி, இவரது கணவர் நித்தியானந்தம், இவர்களுக்கு சாய் கிருஷ்ணா(வயது 4), துர்கேஷ்(வயது 1) என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன்னர் கருத்து வேறுபாடு எழ நந்தினி, நித்தியானந்தம் பிரிந்து வாழ்கின்றனர்.
மூத்த மகன் நித்தியானந்தத்திடமும், 2வது மகன் நந்தினியிடம் வளர்கின்றனர், இந்நிலையில் சம்பவதினத்தன்று துர்கேஷை தனது அம்மா நாகலட்சுமியிடம் விட்டுவிட்டு நந்தினி வேலைக்கு சென்றுள்ளார்.
திரும்பி வந்து பார்த்தபோது, துர்கேஷின் வாயில் நுரைதள்ளி கிடந்துள்ளது, உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து நந்தினி அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
பாட்டி நாகலட்சுமியிடம் விசாரித்த போது, குழந்தையை கொடூரமாக தாக்கியதை ஒப்புக்கொண்டார்.
குழந்தை சேட்டை செய்ததால் கோபத்தில் அடித்தாக கூறியுள்ளார், இதனையடுத்து நாகலட்சுமியை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.