என் பேரனையே அடிக்கிறியா? மகனை துப்பாக்கியால் சுட்ட தாத்தா கைது!
பேரனை அடித்ததால் மகனையே தாத்தா சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த முதியவர் பாராளுமன்றத்தில் சிஆர்பிஎப் வீரராக வேலை பார்த்து ஓய்வு பெற்று விட்டார். தற்போது வங்கியில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரியும் இவர், நாக்பூர் சிந்தாமணி நகரில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அவருக்கு 4 வயதில் மகன் வழி பேரன் இருந்துள்ளார். இந்நிலையில் பேரனை மகனும் மருமகளும் அடிக்கடி அடித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு பேரனை மகனும் மறுமகளும் அடிப்பதை பார்த்து கோபம் அடைந்த அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
கைது
வாக்குவாதம் முற்றிய நிலையில், துப்பாக்கியால் மகனை காலில் சுட்டுட்டார். துப்பாக்கி சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முதியவரை கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர்.
காலில் குண்டு பாய்ந்த அவரது மகன் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதியவரிடம் இருந்த லைசென்ஸ் உள்ள ரைபிள் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.