ஏப்ரல் 2ம் தேதி பிரதமர் தலைமையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் - ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு!
மதுரை பாண்டிகோவில் சுற்றுச்சாலை அருகே வருகிற ஏப்ரல் 2ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இதனையடுத்து, இக்கூட்டம் நடைபெறும் இடத்தை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டார். பின்னர் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கூட்டத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பிரதமர் தலைமையில் நடைபெறும் இந்த பொது கூட்டத்திற்கு மத்திய இணை அமைச்சர் வி.கே சிங், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.