பிரமாண்ட இயக்குனரின் தாயார் .. சென்னையில் காலமானார் : சோகத்தில் திரையுலகம்

died shankarmother
By Irumporai May 18, 2021 02:35 PM GMT
Report

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் தாயார் சற்று முன் சென்னையில் காலமானார். இயக்குனர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் தான் .

அவரின் படங்களில் பிரம்மாண்டமும்  சமூக கருத்துக்களும்  இருக்கும்.

இயக்குனர் ஷங்கர் அவர்கள் 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர்.

இவர் தந்தை  சண்முகம் தாய் முத்துலட்சுமி. இயக்குநர் சங்கர் அவர்கள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். தற்போது தனது கடின உழைப்பால் இந்தியசினிமாவில் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவராக உள்ளார்.

இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் அவர்களின் தாயார் S.முத்துலக்‌ஷ்மி அவர்கள் வயது மூப்பு காரணமாக இன்று சென்னையில் காலமானார்.

அவருக்கு வயது 88. இவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள் பலர் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்