மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!
17 ஆண்டுகளுக்கு பின்னர் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா இன்று காலை நடைபெற்றது.
உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான வரலாறு கொண்டது.
சுமார் 17 ஆண்டுகளுக்கு பின்னர் மகா குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு ரூ.25 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
கங்கை, யமுனை, காவிரி, வைகை உள்ளிட்ட நதிகளில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு யாகசாலையில் வைத்து தினமும் பூஜைகள் நடந்து வந்தன.
இன்று காலையில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது, இதற்காக மதுரை நகரம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டது.
இன்று அதிகாலை 3.45 மணிக்கு 12ம் கால யாகபூஜை நடைபெற்றதை தொடர்ந்து சரியாக 7.40 மணிக்கு கோபுரங்களுக்கு பக்தி கோஷங்கள் விண்ணதிர கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து மூலவர் மீனாட்சி அம்மனுக்கு காலை 8.10 மணிக்கும், சுந்தரேஷ்வரருக்கு 8.50 மணிக்கும் புனித நீரால் கும்பாபிஷேகம் நடந்தது.