கிராண்ட் செஸ் டூர் பட்டம் வென்ற முதல் இந்தியர்
Grand Chess Tour Champion Praggnanandhaa: அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார் பிரக்ஞானந்தா.
உலகின் சிறந்த டாப் 10 கிராண்ட் மாஸ்டர்கள் மட்டுமே பங்கேற்கும் கிராண்ட் செஸ் தொடரின் இறுதிப்போட்டி அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரில் நடைபெற்றது.
இந்த போட்டியில் கலந்து கொண்ட பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் கரானாவுடன் மோதினார்.

முதல் 2 கிளாசிக்கல் சுற்று ஆட்டத்தில் 9-3 என்ற கணக்கில் பின் தங்கிய பிரக்ஞானந்தா, அடுத்தடுத்த ராபிட் சுற்று ஆட்டங்களில் முன்னிலை பெற்றார்.
கடைசியில் பிளிட்ஸ் ஆட்டங்களை பிரக்ஞானந்தா டிரா செய்ததால் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டதில் இறுதியாக 15- 13 என்ற கணக்கில் பட்டம் வென்றார்.
இதன் மூலம் கிராண்ட் செஸ் தொடரின் பட்டம் பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.
