பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
minister
education
student
By Jon
10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் கொரவம்பாளையம் மற்றும் கொளப்பலூர் பேரூராட்சியில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இதனை கூறினார்.
பள்ளிகளுக்கு முதல் மற்றும் 3வது சனிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து தற்போது கூற இயலாது என்ற அவர், உருது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழகத்தில் இல்லை என்றும் உருது படித்த ஆசிரியர்கள் தேவை என்றும் கூறினார்.