பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி: முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள பள்ளிகள் 9, 10 மற்றும் 11 வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படவில்லை. தேர்வு இல்லாமலே மாணவர்கள் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் வெகுவாக குறைந்த பிறகு தற்போது தான் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த ஆண்டும் பொதுத் தேர்வு இல்லாமல் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவனை வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் அரசு முக்கியமான கொள்கை முடிவுகளை எடுக்க முடியாது என்பதால் அதற்கு முன்னதாக தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.