ரவுடி பேபி சூர்யாவை திட்டித் தீர்த்த ஜி.பி.முத்து..!மருந்து குடித்து சாகும்படி ஆவேசம்..

Thahir
in பொழுதுபோக்குReport this article
டிக்டாக் மூலம் பிரபலமடைந்த ஜி.பி.முத்துவின் ஆக்ரோஷமான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் ரவுடிபேபி சூர்யா, இலக்கியாவை பாலியல் தொழிலுக்கு அழைத்த ஆடியோ ஒன்று வைரலானது. ஏற்கனவே ரவுடிபேபி சூர்யா மீது, பல பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்வது உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், சிங்கப்பூரில் வேலை இருப்பதாக கூறி இலக்கியாவிடம், சூர்யா ரேட் பேசிய ஆடியோ முகநூல், யூடியூப் போன்ற சமூக வலைத் தளங்களில் பரவலாகியது. இரண்டு மாதத்திற்கு ரூ.6லட்சம் வரை ரேட் பேசப்பட்ட அந்த ஆடியோவில், சூர்யா ஜி.பி.முத்துவிடம் இருந்து இலக்கியாவின் தொலைப்பேசி எண்ணை வாங்கியதாக கூறியிருந்தார்.
இதனை கேட்டு கொந்தளித்த ஜி.பி.முத்து சூர்யாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது வீடியோக்களுக்கு வரும் கமெண்ட்ஸ் மட்டுமல்லாது பிறரின் வீடியோக்களையும் விமர்சித்து பேசி உலக அளவில் ஃபேமசான ஜி.பி.முத்துவுக்கு, தற்போது தன்னை பற்றி அவதூறு கிளப்பினால் சொல்லவா வேண்டும்? கிளித்தெடுத்துள்ளார் வீடியோவில்.
கிழட்டு மூதேவி சூர்யா நீயும், நானும் பேசியே வெகுநாட்கள் ஆகிவிட்ட நிலையில், என்னிடம் எப்படி நீ இலக்கியாவின் எண்களை பெற்றிருக்க முடியும் என, தனக்கே உண்டான பாஷையிலும்,
வார்த்தைகளிலும் திட்டி தீர்த்துள்ளார் ஜி.பி.முத்து. இந்த வீடியோ தற்போது இணையங்களில் தீயாய் பரவி வருகிறது..