கேவலமா நடத்திட்டாங்க : நயன்தாரா படம் பார்க்க போன ஜிபிமுத்து வருத்தம்
பிக் பாஸ் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமான ஜி பி முத்து தற்பொழுது பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்த தொடங்கிவிட்டார். படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் அவ்வபோது அவரை வைத்து பலரும் தங்களுடைய படங்களை ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு ஜி பி முத்து வளர்ந்துவிட்டார்.
கனெக்ட் திரைப்படம்
இந்த நிலையில், நடிகை நயன்தாரா நடிப்பில் இன்று வெளியான கனெக்ட் திரைப்படத்தின் சிறப்பு கட்சி (பிரீமியர் ஷோ) சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் நடைபெற்றது. அதற்கு நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் வந்தனர்.
எனவே படத்தை பார்க்க சினிமாவில் உள்ள சில பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். ஜிபி முத்துவும் அழைக்கப்பட்டிருக்கிறார். அவரும் படத்தை பார்க்க கிளம்பி வந்த நிலையில், அவரை பவுன்சர் உள்ளேயே விடவில்லையாம்.
ஜிபி முத்து வருத்தம்
இதனால் வேதனையுடன் செய்தியாளர்கள் சந்தித்து பேசிய ஜிபி முத்து ” நயன்தாரா மேடம் வர சொன்னாங்கன்னு சொல்லி கடைசியில் கேவலமா நடத்திட்டாங்க. ஒரு ஓரமாக ஒக்கராவைத்து தூரம் போ..தூரம் போ என பவுன்சர்கள் என்னை கஷ்டப்படுத்திவிட்டார்கள்.
எனக்கு ரொம்பவே மன வருத்தமாக ஆகிவிட்டது. எனவே நான் பாதியில் எழுந்து வந்துவிட்டேன்” என சோகத்துடன் தெரிவித்துள்ளார்.

செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள் : சர்வதேச நீதி கோரும் விஜய் தணிகாசலம் IBC Tamil
