பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ஜி.பி.முத்து - ரசிகர்கள் அதிர்ச்சி

Bigg Boss GP Muthu
By Thahir Oct 22, 2022 01:13 PM GMT
Report

பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்ற ஜி.பி.முத்து வெளியேறியுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிக் பாஸ் போட்டி 

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் 6வது சீசனில் 21 போட்டியாளர்களாக இருந்து வருகின்றனர்.

போட்டியர்களில் மிக முக்கிய போட்டியாளரான ஜி.பி.முத்து வீட்டை மகிழ்ச்சியடைய வைத்து வருகிறார். எதார்த்தமான பேச்சு, காமெடி,அறிவுரைகள் என்று ஜிபி முத்துவின் செயல்கள் அவரது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ஜி.பி.முத்து - ரசிகர்கள் அதிர்ச்சி | Gp Muthu Left The Bigg Boss House

பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இரண்டு வாரங்களே ஆகும் நிலையில், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

வெளியேறினார் ஜி.பி.முத்து 

கடந்த சில நாட்களாக பிக் பாஸ் கேமரா முன் பேசிய ஜி.பி.முத்து என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை, எனக்கு மூச்சு முட்டுது என்றும் என் பிள்ளைகளை பார்க்கனும் தம்பி ஆனந்தை பார்கனும் என்று கூறி புலம்பினார்.

இந்த நிலையில் ஜி.பி.முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.