‘அது இல்லாமல் ஒருநாள் கூட என்னால் இருக்கமுடியாது’ - ஜி.பி.முத்து சொன்ன ரகசியம்

kamalhassan gpmuthu biggbossseason5
By Petchi Avudaiappan Sep 09, 2021 04:47 PM GMT
Report

 டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் அவர் விளக்கமளித்துள்ளார்.

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் தொடரின் சீசன்-5 விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்து உறுதிப்படுத்தாத தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.

இதில் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவும் ஒருவர். பிக்பாஸ் வீட்டில் தான் இருப்பதாக புகைப்படத்தை அவர் பகிர்ந்திருந்ததையடுத்து ஜி.பி.முத்து இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதாக தகவல் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுந்ததோடு மட்டுமல்லாமல் மீம்ஸ்களும் வைரலானது. இந்நிலையில் இந்த கேள்விகளுக்கு ஜி.பி.முத்து பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பிக்பாஸ் வீட்டுக்குள் நான் இருப்பது பற்றி நானே யோசித்து தான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால் மொபைல் இல்லாமல் ஒரு நாள் கூட என்னால் இருக்க முடியாது. அதேசமயம் என்னுடைய குழந்தைகளை பார்க்காமலும் என்னால் இருக்க முடியாது. எத்தனை தடைகள் வந்தாலும் எனக்கு, என்னுடைய மனைவியும் குழந்தைகளும் தான் முக்கியம். அவர்களை பார்க்காமல் என்னால் இருக்கவே முடியாது என தெரிவித்துள்ளார்.