ஜிபி முத்து திடீரென மருத்துவமனையில் அனுமதி; என்னாச்சு - ரசிகர்கள் ஷாக்!

GP Muthu
By Sumathi Apr 17, 2023 07:24 AM GMT
Report

ஜிபி முத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஜிபி முத்து

டிக்டாக் மூலம் பிரபலமானவர் ஜிபி முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த இவருக்கு டிக்டாக்கில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் முதல் போட்டியாளராக எண்ட்ரி கொடுத்தார். முதல் வாரத்திலேயே மக்களின் பேவரைட் போட்டியாளராக மாறினார்.

ஜிபி முத்து திடீரென மருத்துவமனையில் அனுமதி; என்னாச்சு - ரசிகர்கள் ஷாக்! | Gp Muthu Admitted To The Hospital

ஆனால் இரண்டாவது வாரம் தொடங்கியதில் இருந்தே தான் வீட்டுக்கு சென்று தனது மகனை பார்க்க வேண்டும் என்று பிக்பாஸிடம் கோரிக்கை வைத்து வெளியேறினார். தற்போது, குக் வித் கோமாளி சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

 ரசிகர்கள் ஷாக்

இந்நிலையில், திடீரென மருத்துவமனையில் அட்மிட்டாகியுள்ள ஜிபி முத்துவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. படுத்த படுக்கையாக பெட்டில் இருக்கும் ஜிபி முத்துவிற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. தனது இன்ஸ்டாவில் ஃபோட்டோவை ஷேர் செய்த ஜிபி முத்து வேறு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

ஜிபி முத்து திடீரென மருத்துவமனையில் அனுமதி; என்னாச்சு - ரசிகர்கள் ஷாக்! | Gp Muthu Admitted To The Hospital

இதனைப் பார்த்த ரசிகர்கள் ஜிபி முத்துவுக்கு என்ன ஆனது என அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விரைவில் இவரது உடல்நிலை குறித்து தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.