6 வருடங்கள்.. பள்ளிக்கே செல்லாத ஆசிரியர்.. ஆனாலும் கிடைத்த வருமானம் - அது எப்படி?

Uttar Pradesh India
By Swetha Oct 09, 2024 11:00 AM GMT
Report

பள்ளிக்கு செல்லாமல் தவறாமல் வருமானத்தை ஆசிரியர் வாங்கியது தெரியவந்துள்ளது.

6 வருடங்கள்..

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் பரிட்ஷித்கர் என்ற பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அங்கு பணிப்புரியும் ஆசிரியர்களில் ஒருவர்தான் சுஜாதா யாதவ். ஆனால், இவர் பல வருடங்களாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

6 வருடங்கள்.. பள்ளிக்கே செல்லாத ஆசிரியர்.. ஆனாலும் கிடைத்த வருமானம் - அது எப்படி? | Govt Teacher Who Havent Came School Got Salary

இதனால், ஆசிரியர் சுஜாதாவின் பாட வேளை மட்டும் பாடம் எடுக்க ஆசிரியர் இல்லாமல், மாணவர்கள் அவதியடைந்துள்ளனர். இந்த நிலையில், இது குறித்து அரசு பள்ளிகளின் தலைமை அதிகாரியான ஆஷா சவுத்ரிக்கு புகார் கடிதம் பறந்துள்ளது.

அரசு நிகழ்வில் ஆவேசமாக சாமி ஆடிய பள்ளி மாணவிகள் - அதிர்ந்த ஆசிரியர்கள்

அரசு நிகழ்வில் ஆவேசமாக சாமி ஆடிய பள்ளி மாணவிகள் - அதிர்ந்த ஆசிரியர்கள்

வருமானம் 

இதனையடுத்து, சுஜாதா பள்ளிக்கு வராததன் காரணம் என்ன?.. 6 வருடங்களுக்கு மேலாக பள்ளிக்கு செல்லாமல் இருந்தும், மாற்று ஆசிரியர் நியமிக்கப்படாமல் இருந்தது ஏன்? ஆகிய கண்ணோட்டத்தில் மூன்று கட்ட விசாரணைக்கு குழு அமைக்கப்பட்டு

6 வருடங்கள்.. பள்ளிக்கே செல்லாத ஆசிரியர்.. ஆனாலும் கிடைத்த வருமானம் - அது எப்படி? | Govt Teacher Who Havent Came School Got Salary

விடுப்பு குறித்து விசாரனை மேற்கொண்டுள்ளார் மாவட்ட அரசு பள்ளிகளின் தலைமை அதிகாரியான ஆஷா சவுத்ரி. அப்போதுதான் திடுக்கிடும் தகவல் அவருக்கு கிடைத்துள்ளது.. விசாரணையில் கிடைத்த தகவலின்படி, ஆசிரியர் சுஜாதா பள்ளியில் சேர்ந்து பணியாற்றி வந்த கடந்த 2920 நாட்களில்

வெறும் 759 நாட்களுக்கு மட்டுமே பள்ளிக்கு சென்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது. மேலும், பள்ளிக்கு செல்லாத நாட்களிலும் சுஜதாவிற்கு வருகை பதிவி செய்யப்பட்டுள்ளதும், அதற்கான முழு சம்பளத்தையும் பெற்றுவந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.