மாணவிகளை நிர்வாணப்படுதிய ஆசிரியைகள் : உ.பியில் அரேங்கேறிய கொடூர சம்பவம்

Crime
By Irumporai Jul 20, 2022 06:19 PM GMT
Report

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் இரண்டு தலித் மாணவிகள் ஆசிரியர்களால் நிர்வாணமாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவிகளுக்கு தொல்லை

மாணவிகள் சுமார் ஒரு மணி நேரம் நிர்வாணமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கள் மகள்களின் சீருடைகளைக் கழற்றி, புகைப்படம் எடுக்கும்படி கூறியதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

மாணவிகளை நிர்வாணப்படுதிய ஆசிரியைகள் : உ.பியில் அரேங்கேறிய கொடூர சம்பவம் | Govt School To Lend Uniform To Others For Class

காவல்துறை வழக்கு பதிவு

இந்த சம்பவம் ஜூலை 11 அன்று நடந்து உள்ளது. மாணவிகள் 4 ம் வகுப்பில் படித்து வருகின்றனர். அவர்களுக்கு 8 மற்றும் 9 வயது இருக்கும். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பல்வேறு பிரிவுகளின் கீழ் ஜூலை 18 போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.