இதுதான் Eleven-க்கு ஸ்பெல்லிங்கா? அரசு ஆசிரியர்கள் - தலைமை ஆசிரியர் எழுதியதை பாருங்க..

BJP Viral Video Chhattisgarh Education
By Sumathi Aug 02, 2025 07:52 AM GMT
Report

அரசு ஆசிரியர்கள் - தலைமை ஆசிரியர் தவறாக ஆங்கிலம் எழுதிய வீடியோ அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

ஆசிரியர்களின் அவலம்

சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. விஷ்ணு தியோ சாய் முதல்வராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இணையதளத்தில் சில வீடியோக்கள் பரவி வருகிறது.

chhattisgarh

அதில், கோடாசாட் கிராமத்தில் அரசு பள்ளி உள்ளது. இங்கு பணியாற்றும் தலைமையாசிரியர், 2 ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் சரியாக தெரியவில்லை.

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர் - மனைவி உடந்தை?

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர் - மனைவி உடந்தை?

ஷாக் வீடியோ

ஆங்கிலத்தில் Eleven, Eighteen, Nineteen உள்ளிட்டவற்றை எழுத தெரியவில்லை. ஆங்கிலத்தில் தவறாக எழுதினர். அதேபோல் மாவட்ட கலெக்டர் யார்? எஸ்பி யார்? என்ற கேள்விகளுக்கும் அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

இங்கு அரசின் திட்டங்கள், சலுகைகள் முறையாக கிடைக்கின்றன. இருப்பினும், பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களின் இத்தகைய செயல்பாடு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.