வராரு அய்யா வாராரு காமராசர் வாராரு - வைரலாகும் ஆசிரியரின் பாடல்..!
Viral Video
Tiruchirappalli
By Thahir
அரசு பள்ளி ஆசிரியர் நல்லுசாமி என்பவர் நாட்டுபுற தெம்மாங்கில் காமராசர் பற்றி பாடிய பாடல் ஒன்று இணையத்தில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
வைரலாகும் பாடல்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த விடத்திலாம்பட்டியை சேர்ந்தவர் நல்லுசாமி. இவர் கரூர் மாவட்டம், நாடக்காபட்டியில் உள்ள அரசு பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
தேவாரம், திருவாசகம் பாடுவதில் புகழ்பெற்று விளங்கி வரும் நல்லுசாமி காமராசர் பற்றி ஒரு பாடல் எழுதி அதை தெம்மாங்கு மெட்டில் பாடி உள்ளார். அந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.