13 வயது மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் - போக்சோவில் வழக்கு பதிவு!

Sexual harassment POCSO
By Vinothini Jul 06, 2023 08:26 AM GMT
Report

 கன்னியாகுமரியில் அரசு பள்ளி ஆசிரியர் 13 வயது மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பள்ளி

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே ஆலங்கோடு பகுதியை சேர்ந்தவரின் 13-வயது மகன் கண்ணாட்டுவிளை என்ற பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகிறார். இவர் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார், கடந்த மாதம் 14-ம் தேதி பள்ளியில் இவர் மதிய உணவு முடித்துவிட்டு சிறுநீர் கழிப்பதற்காக கழிவறைக்கு சென்றார்.

govt-school-teacher-harassed-a-boy

அப்போது அங்கு வந்த பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் அருள் ஜீவன் மாணவனை ஆய்வகத்திற்கு அழைத்து சென்று அவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனை அந்த சிறுவர் அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

விசாரணை

இந்நிலையில், இவரது தந்தை 21-ம் தேதி குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரத்துள்ளார். இதனை வழக்கு பதிவு செய்து காவல் ஆய்வாளர் சங்கீதா அன்பு ஜூலியட் மற்றும் உதவி ஆய்வாளர் பிரேமா ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவனிடம் விசாரணை நடத்தினர்.

govt-school-teacher-harassed-a-boy

மேலும், விசாரணையில் இவரது பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியாக தெரியவந்தது. இதனால் ஆசிரியர் மீது போக்சோ சட்ட பிரிவு 7, 8, 9F, மற்றும் 10, ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து, தலைமறைவாக இருக்கும் இயற்பியல் ஆசிரியர் அருள்ஜீவனை வலைவீசி தேடிவரும் நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், அவரை ஆசிரியர் பணிஇடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.