நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் : புதிய விவரங்ளை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை

Tamil nadu NEET
By Irumporai Sep 12, 2022 04:46 AM GMT
Report

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தொடர்பாக புதிய தகவலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வு தேர்ச்சி விவரம்

தமிழகத்தில் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களில் 35% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

17,972 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்த நிலையில், 12,840 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். அதன்படி, 12,840 பேரில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி (35%) பெற்றுள்ளனர்.

நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் :  புதிய விவரங்ளை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை | Govt School Students Pass Rate In Neet

பள்ளிக் கல்வித்துறை தகவல்

விழுப்புரம், விருதுநகர், நீலகிரி, சேலம், பெரம்பலூர், மதுரை மாவட்டங்களில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் (100%) பேர் தேர்ச்சி பெற்றனர்.

பெரும்பாலான மாவட்டங்களில் 20% முதல் 25% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில், குறைந்தபட்சமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய 7% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையை பொறுத்தவரையில் நீட் தேர்வு எழுதிய 172 பேரில் 104 பேர் தேர்ச்கி பெற்றுள்ளனர் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது