என் ஆத்தா உன் சேல - மாவட்ட ஆட்சியரை அசத்திய அரசுப்பள்ளி மாணவர், வைரலாகும் வீடியோ
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் அரசு பள்ளி மாணவர் பாடல் பாடிக்காட்டிய வீடியோ வைரலாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கவிதா ராமு கடந்த ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற பின்பு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தினை கவிதா ராமு சிறப்பாக வழிநடத்தி செல்வதாக அரசு அதிகாரிகளும், புதுக்கோட்டை மாவட்ட மக்களும் தெரிவிக்கின்றனர்.
கவிதா ராமு ஒரு பரதநாட்டிய கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர் ஒருவர் கவிதா ராமுவிடம் பாடல் பாடி காண்பிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
அந்த வீடியோவில் நாட்டுப்புற பாடலான ”ஆத்தா உன் சேலை” என்ற பாடலை பாடுகிறார். இந்த ஆத்தா உன் சேலை பாடலானது சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவியான ராஜலட்சுமி ஆகியோர் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பாடும் புகழ் பெற்ற பாடலாகும்.
Vera Level #talent ???
— Dr. T R B Rajaa (@TRBRajaa) November 28, 2021
Someone give this kid a stage to showcase his skills !!! @SunTV @vijaytelevision https://t.co/IYR8PqayDA
தற்போது அந்தப் பாடலை சிறுவன் பாடும் வீடியோ வைரலாகியுள்ளது. மேலும் அந்தப் பாடலை மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி ராஜாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.