திருமணத்திற்கு ரூ.51,000 நிதியுதவி - யார், யாருக்கெல்லாம் கிடைக்கும்?
திருமணத் திட்டத்தின் கீழ் ரூ.51,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.
திருமணத் திட்டம்
மத்திய, மாநில அரசுகள் ஏழைகள், வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
அதில், தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில், உத்தரப்பிரதேசத்தில், ஏழைகளின் திருமணத்திற்கு உதவி செய்யும் நோக்கில் திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் குழு திருமணத் திட்டத்தின் கீழ் ஏழை மற்றும் ஆதரவற்றவர்களின் திருமணத்திற்காக மொத்தம் ரூ.51,000 அரசால் வழங்கப்படுகிறது.
தகுதிகள் என்ன?
அதன்படி, திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்க முதலில் ரூ.10,000, பின் திருமண விழாவுக்கு அலங்காரத்திற்காக ரூ.6,000, திருமணத்திற்குப் பிறகு மணமகளின் வங்கிக் கணக்கில் ரூ.35,000 டெபாசிட் செய்யப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்புபவர்கள் அந்த மாநிலத்தை பூர்விமாக கொண்டு, ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
பட்டியல் சாதி அல்லது ஓபிசி பிரிவினராக இருக்க வேண்டும். சாதிச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மணமகளின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், மணமகனின் குறைந்தபட்ச வயது 21ஆகவும் இருக்க வேண்டியது அவசியம்.