அரசு திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும் - அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!

Udhayanidhi Stalin DMK Dharmapuri
By Jiyath Sep 27, 2023 02:45 AM GMT
Report

அரசு திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்

தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து துறை பணிகள் குறித்து அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நேற்று இரவு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

அரசு திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும் - அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்! | Govt Programs Must Reach People Fully Udhayanidhi

அவரை மாவட்ட ஆட்சியர் சாந்தி வரவேற்றார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அனைத்து துறை சார்ந்த வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளிடம் ஆய்வு நடத்தினார்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

பின்னர் அவர் பேசியதாவது "தமிழ்நாடு அரசின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பயனாளிகளுக்கு முழுமையாக சென்று சேரும் வகையில் செயல்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும் - அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்! | Govt Programs Must Reach People Fully Udhayanidhi

காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளும் உணவு சாப்பிடுவதை உறுதிப்படுத்த வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதிகளில் அரசு விதிமுறைகள்படி தரமான சத்தான உணவு வழங்கப்படுவதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகள் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தை மேலும் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நிலுவையில் உள்ள சாலைப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்' என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.