12 ஆம் வகுப்பு தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் - கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தல்
Karthi cidambaram
12th public exam
By Petchi Avudaiappan
பெற்றோர், மாணவர்களின் கருத்தை கேட்டு அவர்களின் நலன் கருதி 12 ஆம் வகுப்புத் தேர்வை தமிழக அரசு கட்டாயம் நடத்த வேண்டும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 12 ஆம் வகுப்பு தேர்வை நடத்தாமல் மாணவர்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது பல குழப்பங்களுக்கு வழிவகுக்கும் என தெரிவித்தார்.
கொரானா காலத்தில் தேர்தலையே நடத்தினோம். அதைப்போல் 12ம் வகுப்பு தேர்வையும் நடத்த வேண்டும் எனவும் கார்த்தி சிதம்பரம் கேட்டுக்கொண்டார். மேலும் தேர்வுகளை திருமண மண்டபங்களிலோ, பெரிய பெரிய அரங்குகளிலோ நடத்தலாம் என அரசுக்கு யோசனையும் கூறினார்.