நன்றிக் கடனுக்காக அரசு பதவியா? உங்கள் குடும்ப சொத்து அல்ல - அன்புமணி சாடல்!

Anbumani Ramadoss M K Stalin Tamil nadu
By Swetha Aug 19, 2024 03:00 AM GMT
Report

அரசு பதவிகள் முதலமைச்சரின் குடும்பச் சொத்துகள் அல்ல என அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார்.

அன்புமணி

தமிழ்நாட்டில் காவல் துறை, சிறைத் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட துறைகளுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுக்க தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் இயங்கி வருகிறது. அதன் தலைவராக ஓய்வுபெற்ற காவல்துறை டிஜிபி சுனில் குமாரை நியமித்து அண்மையில் தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நன்றிக் கடனுக்காக அரசு பதவியா? உங்கள் குடும்ப சொத்து அல்ல - அன்புமணி சாடல்! | Govt Job Is Not Cm Property Anbumani Slams Stalin

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இதுவரை பணியில் உள்ள காவல்துறை தலைமை இயக்குனர் நிலை அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்த இந்தப் பணிக்கு, இதுவரை இல்லாத வகையில் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் அதற்கு ஆணையத்தின் தலைவர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டிய அவர், அத்தகைய சூழலில், ஆணையத்தின் தலைவராக இருப்பவர் பணியில் இருக்கும் அதிகாரியாக இருந்தால், அவரை பணியிடை நீக்கம் செய்வது,

அவர் மீது வழக்குத் தொடர்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். ஆனால், ஓய்வு பெற்ற அதிகாரிக்கு எந்தவித பொறுப்பும் கிடையாது என்ற அன்புமணி, பொறுப்புடைமையை நிர்ணயிக்க முடியாத அதிகாரி ஒருவரை இந்த பதவியில் எப்படி நியமிக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், சீருடைப் பணியாளர் ஆணையத்தின் தலைவர் பணிக்கு ஓய்வு பெற்ற அதிகாரியை நியமிக்கும் அளவுக்கு தமிழக காவல்துறையில் பொறுப்பான அதிகாரிகளுக்கு எந்த பஞ்சமும் இல்லை. தமிழக காவல்துறையில் டிஜிபி அந்தஸ்தில் மொத்தம் 16 அதிகாரிகள் உள்ளதாகவும்,

பேருந்து கட்டணத்தை உயர்த்த ஆணையம்; அரசுக்கு இரக்கம் இல்லையா? அன்புமணி கண்டனம்

பேருந்து கட்டணத்தை உயர்த்த ஆணையம்; அரசுக்கு இரக்கம் இல்லையா? அன்புமணி கண்டனம்

குடும்ப சொத்து அல்ல..

பல அதிகாரிகளுக்கு பொறுப்பான பதவிகள் வழங்கப்படவில்லை. “சுனில்குமாரை பதவியில் அமர்த்த ஏற்கனவே அந்த பதவியில் இருந்த சீமா அமர்வால் என்ற டபெண் அதிகாரி ஒருவரை இடமாற்றம் செய்ததுதான்.

நன்றிக் கடனுக்காக அரசு பதவியா? உங்கள் குடும்ப சொத்து அல்ல - அன்புமணி சாடல்! | Govt Job Is Not Cm Property Anbumani Slams Stalin

பணியில் இருந்து இரு ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு பதவி வழங்குவதற்காக இத்தனை சமரசங்களையும், வளைப்புகளையும் செய்ய வேண்டிய தேவை என்ன? என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

மேலும், “மு.க.ஸ்டாலினுக்கும், வெளிநாடுகளில் அவருக்காக முதலீடு செய்ததாக கூறப்படும் தொழிலதிபர் ஒருவருக்கும் பாலமாக செயல்பட்டவர் என்ற குற்றச்சாட்டு சுனில்குமார் மீது உண்டு. அந்த அடிப்படையில் அதிமுக ஆட்சியின் போது,

சுனில் குமாருக்கு நெருக்கடி தரப்பட்டன. அதற்கு நன்றிக் கடனாகவே சுனில்குமாருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. நன்றிக்கடனுக்காக பதவிகளை வழங்க அரசு பதவிகள் முதலமைச்சரின் குடும்பச் சொத்துகள் அல்ல.

இது தவறான முன்னுதாரமான அமைந்துவிடும். இதை உணர்ந்து கொண்டு, சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக சுனில்குமார் நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும்” இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.