கரூர் கூட்ட நெரிசல்: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அரசுப்பணி?
Karur
TVK
By Fathima
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப்பணி நியமன ஆணையை முதலமைச்சர் விஜய் வழங்கலாம் என கூறப்படுகிறது.
கடந்தாண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் தவெக தலைவர் விஜய், கரூரில் பிரசாரத்தின்போது கூட்டம் அதிகம் இருந்ததால் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.
இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது, இந்நிலையில் தற்போதைய முதலமைச்சரான விஜய் வருகிற 10ம் தேதி கரூர் செல்லவுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்குவதற்கான நியமன ஆணையை வழங்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.