இனி ரேஷன் கார்டு அவசியமில்லை - பொருட்களை வாங்க இந்த APP இருந்தாலே போதும்

Tamil nadu India
By Karthikraja Dec 22, 2024 02:17 PM GMT
Report

ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டுக்கு பதிலாக APP ஐ பயன்படுத்தி பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.

ரேஷன் கடைகள்

ரேஷன் கடைகளில், பொதுமக்களுக்கு நியாய விலையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையின் போது கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் வேஷ்டி, சேலையும் வழங்கப்படுகிறது.  

ration shop Mera Ration 2.0 app

தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. கைரேகை பதிவு மற்றும் QR கோடுடன் அரசு வழங்கிய ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.

Mera Ration 2.0

இந்நிலையில் அனைத்து துறைகளையும் டிஜிட்டல் மயமாக்கி வரும் மத்திய அரசு, ரேஷன் கடைகளிலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை புகுத்தியுள்ளது. இனி ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு கொண்டு செல்லாமல் கூட பொருட்களை வாங்கும் வகையில், Mera Ration 2.0 செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 

how to use Mera Ration 2.0 app in tamil

இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த செயலியில் பயனர் அவரின் ஆதார் அட்டை எண்ணை உள்ளீடு செய்த பிறகு, ஆதார் அட்டை உடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பருக்கு ஒரு OTP மெசேஜ் வரும். அதை செயலியில் உள்ளீடு செய்தால் உங்களின் ரேஷன் கார்டின் டிஜிட்டல் வடிவம் அந்த செயலியில் தோன்றும்.

வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் ரேஷன் கார்டு தொலைந்து விட்டாலோ அவசரத்தில் மறந்து வைத்து விட்டாலோ கவலைப்பட தேவையில்லை. இந்த செயலியை பயன்படுத்தி ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம்.