என்ன கொடுமை சார் இது..எக்ஸ்ரேவுக்கு பதில் ஜெராக்ஸ் -அரசு மருத்துவமனையில் நடந்த அவலம்!

Government of Tamil Nadu Tenkasi Doctors
By Vidhya Senthil Nov 10, 2024 07:34 AM GMT
Report

 அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு எக்ஸ்ரேக்கு பதிலாக ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 அரசு மருத்துவமனை

தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த காளி பாண்டி என்பவர் உணவகத்தில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

எக்ஸ்ரேவுக்கு பதில் ஜெராக்ஸ்

இதனால் எலும்பு முறிவு ஏற்பட்டது.இதனையடுத்து தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.அங்கு மருத்துவர் 'எக்ஸ்ரே' எடுக்கக் கூறியுள்ளனர். இதற்காக மருத்துவமனை வளாகத்தில் உள்ள 'எக்ஸ்ரே' மையத்தில், 'எக்ஸ்ரே' எடுத்துள்ளார். அப்போது எக்ஸ்ரே ரிப்போர்ட்டை பிலிமுக்கு பதிலாக, ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்தனர்.

நெஞ்சு வலியால் சாலையில் சரிந்த இளைஞர் - உயிரை காப்பாற்றிய போக்குவரத்து காவலர்

நெஞ்சு வலியால் சாலையில் சரிந்த இளைஞர் - உயிரை காப்பாற்றிய போக்குவரத்து காவலர்

இது குறித்து நோயாளி காளி பாண்டி மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டபோது பிலிம் தீர்ந்து விட்டதாக அலட்சியமாகத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவனைக்கு சென்ற காளி பாண்டி ஜெராக்ஸ் ரிப்போர்ட்டை காண்பித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்தனர் .

ஜெராக்ஸ்

இந்த சம்பவம் குறித்து தென்காசி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் பிரேமலதா கூறியதாவது: அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுப்பதற்கு அனைத்து வசதிகளும் உள்ளனர. மேலும் அரசு வழிகாட்டுதலின் படி எக்ஸ்ரே பிலிம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

govt hospital

தற்பொழுது நோயாளிகளின் எக்ஸ்ரே விவரங்கள் டிஜிட்டல் மூலம் மருத்துவர்களுக்கு இணையத்தில் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் அவர்கள் கம்ப்யூட்டரில் அதனைத் தெளிவாகப் பார்த்து நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்குவது வாடிக்கையாக நடைபெற்று வருவதாகக் கூறினார்.