அரசு மருத்தவமனையில் பயங்கர தீ விபத்து - 11 பேர் உயிரிழப்பு

Death Patient Hospital Fire Govt
By Thahir Nov 06, 2021 10:45 AM GMT
Report

மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியானார்கள், 12 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவசர சிகிச்சைப் பிரிவில் குறைந்தபட்சம் 20 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கொரோனா பாதிப்பு நோயாளிகள் எனக் கூறப்படுகிறது.

நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அருகில் உள்ள மற்ற வார்டுகளுக்கும் பரவிய தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து நோயாளிகளை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் தீயணைப்புப் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.