தாய்க்கு சரியான சிகிச்சை இல்லை - அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து

Tamil nadu Chennai Ma. Subramanian
By Karthikraja Nov 13, 2024 07:07 AM GMT
Report

அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவருக்கு கத்திக்குத்து

சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இன்று வழக்கம்போல் நோயாளிகள் சிகிச்சைக்காக வந்திருந்தனர். 

chennai guindy kalaignar hospital

அப்போது மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவின் சிறப்பு மருத்துவர் பாலாஜியிடம் 4 பேர் தகராறு செய்துள்ளனர். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருத்துவர் பாலாஜியை குத்தியுள்ளனர்.

இருவர் கைது

சம்பவ இடத்திலேயே மருத்துவர் பாலாஜி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தவர்கள், மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய இருவரை பிடித்தனர். இது குறித்து உடனடியாக கிண்டி காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

arrest

விரைந்து வந்த காவல்துறையினர், பிடிபட்ட நபர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்திய காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். விசாரணையில் தாய்க்கு சரியான சிகிச்சை தரவில்லை என கத்தியால் குத்தியதாக தெரிய வந்துள்ளது.

தீவிர சிகிச்சை

கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயமடைந்த மருத்துவர் பாலாஜிக்கு, அதே மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துமனைக்கு சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வந்து ஆய்வு செய்துள்ளார்.

மருத்துமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் அதிகளவு கூடும் மருத்துமனையில் கத்திக்குத்து நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.