பாகிஸ்தான் ஆதரவு யூ-டியூப் சேனல்களை முடக்கி மத்திய அரசு அதிரடி

pakistan centralgovernment youtubechannels
By Petchi Avudaiappan Dec 21, 2021 06:31 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

இந்தியாவில்  தேச விரோத செயல்பாட்டினை கொண்டிருந்த 20 யூடியூப் சேனல்களை முடக்கி மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 

பாகிஸ்தானைச் சேர்ந்த சில யூடியூப் சேனல்களின் இணையதளங்கள் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் ஆதரவுடன் இந்தியாவுக்கு எதிரான பொய் செய்திகளை பரப்பி வந்தது மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கவனத்துக்கு வந்தது. இதில் குறிப்பிட்ட சில யூடியூப் சேனல்களை கண்காணித்த போது அவை விவசாயிகள் போராட்டம், காஷ்மீர் விவகாரம், அயோத்தி, ஜெனரல் பிபின் ராவத் மறைவு போன்ற பல்வேறு விவகாரங்களில் இந்தியாவுக்கு எதிரான அடிப்படை ஆதாரமற்ற பொய் செய்திகளை பரப்பி வந்தது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் செயலர் அபூர்வ சந்திரா இது குறித்து யூடியூப் மற்றும் தொலைத்தொடர்பு அமைசகத்திற்கு கடிதம் எழுதினார். அதில் மேற்கண்ட யூடியூப் சேனல்கள் இந்திய இறையாண்மை எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறித்த விசாரணையின் அடிப்படையில் அந்த யூடியூப் சேனல்கள் மற்றும் சில வெப்சைட்களை உடனடியாக முடக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதனடிப்படையில் தேச விரோத நடவடிக்கைகளுக்கு காரணமாக இருந்த 20 யூடியூப் சேனல்கள் மற்றும் இரண்டு வெப்சைட்கள் முடக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் புதிதாக கொண்டு வரப்பட்டிருக்கும் 2021 தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் சிறப்பு அதிகாரத்தை கொண்டு இந்த முடக்க நடக்கவடிக்கை முதல் முறையாக எடுக்கப்பட்டு்ள்ளது குறிப்பிடத்தக்கது.