கார்த்திகை தீபத் திருவிழா.. 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - அரசு அறிவிப்பு!

Tamil nadu Tiruvannamalai
By Vinothini Nov 22, 2023 04:34 AM GMT
Report

தீபத் திருவிழாவை ஒட்டி 2700 சிறப்பு பேருந்துகள் இயக்குவதாக அரசு தெரிவித்துள்ளது.

கார்த்திகை தீபம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழா நடக்க இருப்பதையொட்டி 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், "திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருநாள் 26/11/2023 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணிக்கு நடைபெறவுள்ளதை முன்னிட்டும்,

karthigai deepam

27/11/2023 அன்று பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும், 25/11/2023 சனிக்கிழமை முதல் 27/11/2023 வரை அனைத்து பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக சிறப்பு பேருந்துகள்,

முட்ட வந்த மாடு.. பயந்து பேருந்து சக்கரத்தில் சிக்கிய நபர் - உயிரிழந்த சோகம்!

முட்ட வந்த மாடு.. பயந்து பேருந்து சக்கரத்தில் சிக்கிய நபர் - உயிரிழந்த சோகம்!

அறிக்கை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, சென்னையிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் மேற்கண்ட நாட்களில் 2700 சிறப்பு பேருந்துகள் மூலம் 6947 நடைகள் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட உள்ளது.

setc bus

திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து பக்தர்கள் கிரிவலப் பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாக 40 சிற்றுந்துகள் பயணிகள் கட்டணமில்லா சிற்றுந்துகளாக இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளனர்.