எல்லோருக்கும் எல்லாம் - வீட்டுக்கேட்ட 7 பேர் உடனே ஒதுக்கிய அரசு..! உதயநிதி நெகிழ்ச்சி.!

Udhayanidhi Stalin M K Stalin Tamil nadu DMK
By Karthick Jan 06, 2024 01:43 AM GMT
Report

வீட்டுக்கேட்ட 7 பேருக்கு தமிழக அரசு வீடு ஒதுக்கியுள்ளதை குறித்து விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

உதயநிதி பதிவு

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எல்லோருக்கும் எல்லாம்" என்ற கொள்கை வழியில் இயங்கும் நம்முடைய திராவிட மாடல் அரசு, சரியான இருப்பிடம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு நிரந்தர வீடு என்ற அவர்களின் கனவைத் தொடர்ந்து நனவாக்கி வருகிறது.

govt-alloted-7-house-for-people-udhay-shares

அந்த வகையில், நம்மிடம் கோரிக்கை மனு அளித்திருந்த சென்னை மயிலாப்பூர், டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 7 குடும்பங்களுக்கு, சென்னை மூலக்கொத்தளம் மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் புதிய வீடுகளை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கான ஆணைகளை இன்று வழங்கினோம்.

அவர்களின் முகங்களில் தெரியும் மகிழ்ச்சியே, கழக அரசின் நல்லாட்சிக்கு சாட்சி. புது வீடுகளை பெற்றுள்ள அக்குடும்பத்தாருக்கு என் அன்பும், வாழ்த்தும் என பதிவிட்டுள்ளார்.