ரேசன் கடைகளில் பொருட்களை தர மறுக்கிறார்களா? இனி கவலை வேண்டாம் - அதிரடி உத்தரவு போட்ட அரசு
ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் ரேசன் பொருட்களை வழங்க ஊழியர்கள் மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து வந்த புகார்கள்
ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் மூலமாக இந்தியாவின் எந்த மாநிலத்தை சேர்ந்தவரும் எங்கும் பொருட்கள் வாங்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதன் மூலம் தங்கள் சொந்த மாநிலங்களை விட்டு பிற பகுதிகளில் வசிக்கும் பகுதிகளிலேயே தங்களுக்கு தேவையான ரேசன் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.
இந்த நிலையில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் பொருட்கள் தமிழ்நாட்டில் முறையாக வழங்கப்படுவதில்லை என புகார் எழுந்து வருகிறது.
தமிழக அரசு அதிரடி உத்தரவு
இதையடுத்து அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையில எச்சரிக்கை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதில், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் தகுதி உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேசன் பொருட்கள் மறுக்கப்படாமல் வழங்கப்பட வேண்டும் எனவும்,
பொருட்களை வழங்க மறுக்கு ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.