பாஜகவினருக்கு கொரோனா வராது ஏன் தெரியுமா? புது விளக்கம் கொடுத்த பாஜக எம்.எல்.ஏ

covid bjp politician Govind Patel
By Jon Mar 24, 2021 05:09 PM GMT
Report

பாஜாகவினர் கடுமையாக உழைப்பதால் அவர்களுக்குக் கொரோனா தொற்று வராது என குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ கோவிந்த் பட்டேல் கூறியுள்ளார். அகமதாபாத்தில் கொரோன வேகமாகப் பரவுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் செய்தியாளர்களை சந்தித்த குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ கோவிந்த் பட்டேல் “உழைப்பாளிகளுக்குக் கொரோனா பரவாது என கூறினார்.

மேலும், பாஜகவினர் கடுமையாக உழைப்பதால் அவர்களுக்குக் கொரோனா பரவாது" என கூறியுள்ளார் கடந்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையின்போது, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

அதேபோல் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்பன் பட் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.