பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் அரசுக்கு எதிராக செயல்படுகின்றனர் - மக்களவையில் கனிமொழி குற்றச்சாட்டு
பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் அரசுக்கு எதிராக செயல்படுவதாக மக்களவையில் எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
ஆளுநர்கள் குறித்து கனிமொழி புகார்
மக்களவையில் பேசிய துாத்துக்குடி எம்.பி கனிமொழி பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார். அவர் மக்களவையில் பேசிய உரை பின்வருமாறு;
தமிழகத்தில் தேர்தல் ஏதும் இல்லை என்பதால் குடியரசு தலைவர் தனது உரையில் திருக்குரலை மேற்கோள்காட்டவில்லை.
தமிழகத்தில் தேர்தல் ஏதும் இல்லை என்பதால் குடியரசு தலைவர் தனது உரையில் திருக்குறலை மேற்கொள்ளவில்லை.
உடன் கட்டை ஏறுவது குறித்து மக்களவையில் பெருமையாக பேசுவது வெட்கப்பட வைக்கும் செயல்.
பாஜக உறுப்பினர் ஜோஷி பெண்கள் குறித்து தெரிவித்த கருத்து வருத்தப்பட வைப்பதாக கனிமொழி குறிப்பிட்டார்.
தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் அரசுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் அரசுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
அதானி பற்றிய அறிக்கையை இந்தியாவுக்கு எதிரானதாக எப்படி கருத முடியும்? என கேள்வி எழுப்பினார்.
தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ரூ.11.86 கோடியும், சமஸ்கிருதத்துக்கு ரூ.198.83 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லுாரிகளில் கட்டணம் உயர்வால் ஏழை மாணவர்களால் படிக்க முடியவில்லை என தெரிவித்தார்.
ரயில்வே திட்டங்களிலும் தமிழகத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியிருப்பதாக கனிமொழி குற்றம்சாட்டினார்.
மதுரை எய்ம்ஸ்க்கு நிலத்தை ஒப்படைத்து பல ஆண்டுகள் கடந்தும் இன்னும் கட்டப்படவில்லை.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.