ஆளுநர் உரைக்கு வருத்தம் : சட்டப்பேரவை செயலர் கடிதம்
ஆளுநர் உரைக்கு வருத்தமும் நன்றியும் பதிவு செய்ய கூறி அறிவிப்பு வரபெற்றுள்ளதாக சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் கடிதம் எழுதியுள்ளார்.
சர்ச்சையான ஆளுநர் உரை
ஆளுநர் உரைக்கு வருத்தமும் நன்றியும் பதிவு செய்ய கூறி அறிவிப்பு வரபெற்றுள்ளதாக எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் கடிதம் எழுதியுள்ளார்.
வருத்தம் பதிவு
அந்த கடிதத்தில் தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்டு ஆளுநர் அவர்களால் இசைவளிக்கப்பட்டு, பேரவைக்கு வழங்கப்பட்ட உரையில் சில பகுதிகளை இணைத்தும் விடுத்தும் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உரையாற்றியமைக்கு பேரவை தனது வருத்தத்தை பதிவு செய்கிறது.
பேரவையின் மாண்பினை போற்றிடும் வகையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி பேரவையில் பதிவு செய்யப்பட்ட ஆளுநர் அவர்களின் உரைக்கு பேரவை உறுப்பினர்கள் நன்றி உடையவர்கள் ஆவார்கள் என தெரிவித்துள்ளது.